தோஷிபா களமிறக்கும் புதிய அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப்

Loading...

தோஷிபா களமிறக்கும் புதிய அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப்லேப்டாப் தயாரிப்பில் தோஷிபா நிறுவனம் கணிசமான அளவில் பங்களிப்பைச் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஒரு புதிய அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப்பைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புக்கு தோஷிபா சேட்டிலைட் யு845டபுள்யு அல்ட்ராபுக் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

14.4 இன்ச் அளவில் இருக்கும் இதன் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது. அதனால் இதில் வீடியோ பார்ப்பது சூப்பராக இருக்கும். மேலும் குறிப்பாக பயணத்தின் போது இந்த லேப்டாப்பை மிக எளிதாகப் பயன்படுத்தலாம். அதோடு இதில் அலுமினிய தகட்டால் செய்யப்பட்டுள்ளால் பார்ப்பதற்கு பந்தாவாக இருக்கும். அதே நேரத்தில் மிக உறுதியாகவும் இருக்கும்.

இணைப்பு வசதிகளுக்காக இந்த லேப்டாப்பில் ஏராளமான தொழில் நுட்பங்கள் உள்ளன. அதாவது எர்த்நெட் ஜாக், யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்ஐ போன்ற வசதிகள் உள்ளதால் இதில் தகவல் பரிமாற்றம் மிக விரைவாக நடக்கும். அதோடு இதில் ஹெட்போன் மற்றும் மெமரி கார்டுக்கு என்று தனியாக போர்ட்டுகளும் உள்ளன.

இந்த லேப்டாப் சக்தி வாய்ந்த இன்டல் கோர் ஐ5 சிபியுவுடன் வருகிறது. மேலும் 6ஜிபி ரேம், 500ஜிபி ஹார்ட் ட்ரைவ் மற்றும் 32ஜிபி சேமிப்பு போன்றவற்றுடன் வருவதால் இதன் இயங்கு திறன் மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் இந்த லேப்டாப் மிக வேகமாகவும் செயல்படும்.

இந்த தோஷிபா லேப்டாப் விண்டோஸ் 7 ப்ரபசனல் ஹோம் ப்ரீமியம் இயங்கு தளத்தில் இயங்குகிறது. விலையைப் பொருத்த மட்டில் இந்த லேப்டாப்பை ரூ.52,000 முதல் வாங்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply