தோஷிபா வின் உலகின் பெரிய சைஸ் டிவி

Loading...

தோஷிபா’வின் உலகின் பெரிய சைஸ் டிவிதோஷிபா இந்தியா நிறுவனம் மெகா சைசில் ஒரு புதிய டிவியைக் களமிறக்கி இருக்கிறது. இந்த டிவிக்கும் ஆர்ஸட்1 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த டிவிதான் உலகின் முதல் மிகப் பெரிய க்ளாஸ் பிரி டிவியாக இருக்கும் என்று தோஷிபா கூறுகிறது.

இந்த டிவி 55 இன்ச் அளவைக் கொண்டிருக்கிறது. எனவே குழுவாக அமர்ந்து இதில் சூப்பராக டிவி பார்க்கலாம். எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் இந்த டிவியை நேரே பார்ப்பது போலவே இருக்கும். அந்த அளவிற்கு இதன் 3டி வசதி சூப்பராக இருக்கிறது.

இதன் விலைதான் சற்று அதிகமாக இருக்கிறது. அதாவது இந்த டிவியை ரூ.12 லட்சத்திற்கு வாங்கலாம். இந்த டிவி 2டி கண்டன்டுகளை முழு எச்டி ரிசலூசனில் 4 மடங்குகள் அதிகரித்துக் காட்டும்.

இந்த டிவி தோஷிபாவின் மல்டி ப்ராசஸர் தளமான ரெக்சா என்ஜின் சிஇவிஒ டுவோ எஸ்ஸைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டிவி பேஸ் ட்ராக்கிங் வசதி உள்ளதால் பார்வையாளர்கள் எந்தப் பக்கம் உள்ளார்களோ அவர்களுக்கு நேராக டிவி திரை தெரியும் அளவிற்கு ரிமோட் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.

இந்த மெகா சைஸ் டிவியைத் தவிர்த்து தோஷிபா இன்னும் பிற 6 டிவி மாடல்களைக் களமிறக்கி இருக்கிறது. இந்த டிவிக்களுக்கு ஆர்டபுள்யு1, பிஎக்ஸ்200, பிடி200, பியு200 மற்றும் பிபி200 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறன.

இந்த டிவிக்கள் 19 இன்ச் முதல் 55 இன்ச் அளவுகளில் வருகின்றன. இவற்றின் விலையும் சைசிற்குத் தகுந்தாற்போல் ரூ.10,000லிருந்து ரூ.1,20,000 வரை இருக்கின்றன.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply