தேங்காய்ப்பால் பட்டாணிக் குழம்பு

Loading...

தேங்காய்ப்பால் பட்டாணிக் குழம்பு
தேவையான பொருட்கள் :

உலர்ந்த வெள்ளை / பச்சைப் பட்டாணி 1 கப்
தக்காளி 1
வெங்காயம் 1
தேங்காய்ப்பால் 1 கப்
புளி பேஸ்ட் 1/2 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 2
சாம்பார் பொடி 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
மசாலா 1/2 டீஸ்பூன்
கெரட் துருவல் 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது
கடுகு 1/2 டீஸ்பூன்
எண்ணெய் 1 டீஸ்பூன்
உப்பு சுவைக்கேற்ப


செய்முறை :

பட்டாணியை இரவில் ஊற வைத்துக் கொள்ளவும். காலையில், உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வரை வேகவிட்டு எடுக்கவும்.

வெந்த பட்டாணியில் சிறிது எடுத்து, தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பட்டாணியைத் தண்ணீரை வடித்து, இலேசாக மசித்துத் தனியே வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வெங்காயத்தை வதக்கி, மஞ்சள் தூள், அரைத்த விழுது, புளி பேஸ்ட், வெந்த பட்டாணி, சாம்பார் பொடி போட்டு, 1 கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும். தீயை சிறியதாக்கி, கெரட் துருவல், தேங்காய்ப்பால் விட்டுக் கலக்கி, ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்.

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply