துள்ளும் இளமையின் இரகசியங்கள்

Loading...

துள்ளும் இளமையின் இரகசியங்கள்ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்றியமையாதது. 13 முதல் 19 வயது வரையிலான இந்த டீன்ஏஜ் பருவத்தில் உடலும், மனதும் ஒருசேர அதிவேகமாக வளர்கிறது. சிறு வயது பருவத்தைக் கடந்து – இனிமை மிகுந்த இளமைப் பருவத்திற்குள் அடியெடுத்து வைக்கும்போது உடல் இனப்பெருக்கத்திற்கு தயாராகும் உன்னதநிலையை அடைகிறது.
அப்போது ஆரோக்கியத்திற்கும், சக்திக்கும் தேவையான சரிவிகித சத்துணவு உடலுக்கு மிகமிக அவசியம். ஆண்களுக்கு 12 முதல் 16 வயதும், பெண்களுக்கு 10 முதல் 14 வயதும் குறிப்பிடத்தக்கது. அப்போது உடல் வளர்ச்சியும், இனப் பெருக்க உறுப்புகளின் கட்டமைப்பு வளர்ச்சியும் வேகமாக மேம்பாடு அடைவதால், அதற்கு ஏற்ற சத்துணவுகள் அவசியமாகிறது.
டீன்ஏஜ் பருவத்தில் பெண்கள் உணவில் மிகுந்த அக்கறை கொண்டு உண்ணவேண்டும். ஏன்என்றால் அது அந்த பருவத்திற்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் தாய்மை தொடர்புடைய நிகழ்வுகளுக்கும் ஆரோக்கிய அஸ்திவாரமாகும். டீன்ஏஜ் பெண்கள் இப்போதே தேவையான அளவு சத்துணவுகளை உண்ணாவிட்டால் எதிர்காலத்தில் அவர்கள் தாய்மை அடைவதில் நெருக்கடி ஏற்படும்.
ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பதிலும் சிக்கல் ஏற்படும். அதாவது எதிர்காலத்தில் தாய், குழந்தை இருவர் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். உடல் பலம், தசை வளர்ச்சி, எலும்பு பலம், உற்சாகம் போன்ற அனைத்திற்கும் உணவு மூலம் கிடைக்கும் சக்தி அவசியமாகிறது. டீன்ஏஜ் ஆண்களுக்கு தினமும் 3020 கலோரி சக்தியும், டீன்ஏஜ் பெண்களுக்கு 2440 கலோரி சக்தியும் தேவை.
இளம் பருவத்தினர் உணவில் பால்வகை பொருட்களை சேர்க்க வேண்டும். ஆனால் அதில் கொழுப்பு குறைவாக இருக்கவேண்டும். பழவகைகள், தவிடு நீக்காத தானியங்கள், காய்கறி வகைகள், எண்ணெய், நெய், வெண்ணெய், வேர்க்கடலை, எள், கேழ்வரகு போன்ற பலதரப்பட்ட சத்துணவுகள் அவசியம். உடல் வளர்ச்சி நிறைந்த டீன்ஏஜில், அதற்கு துணைபுரியும் புரோட்டீன் சத்து மிக அவசியம்.
டீன்ஏஜ் ஆணுக்கு தினமும் 61.5 கிராமும், பெண்ணுக்கு 55.5 கிராமும் தேவை. பால் மற்றும் பால் வகை பொருட்கள், பயறு வகைகள், முட்டை, மாமிசம், எண்ணெய் வித்துக்கள் போன்றவைகளில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது. மாமிசம் சாப்பிட விரும்பாதவர்கள் பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
முந்திரிபருப்பையும் தேவைக்கு தக்கபடி எடுத்துக்கொள்ளலாம். உடலில் புரோட்டீன் சத்து குறைந்தால் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களுக்கு துணைபுரிவது, கொழுப்பு. டீன்ஏஜினருக்கு உணவு மூலம் கிடைக்கும் கொழுப்பு இன்றியமையாததாக இருக்கிறது. அதே நேரத்தில் கொழுப்பு சத்து அதிகமாகிவிடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
கோழி முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய், நெய், பால் வகை பொருட்கள், தேங்காய் எண்ணெய் போன்றவைகளிலும், மாமிசத் தில் இருக்கும் கொழுப்புகளிலும், கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. உடல் இயக்கத்திற்கு வைட்டமின் சத்துக்களும் அவசியம்.
மேலும் இவை ஆன்டி ஆக்சிடென்ட் ஆகவும் செயல்படுகிறது. இத்தகைய வைட்டமின் சத்துக்களைப் பெற பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிற காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை சாப்பிடவேண்டும். நார் சத்துக்கள் நிறைந்த கோதுமை, தவிடு நீக்காத அரிசி, பயறு, பருப்பு வகைகளையும் டீன்ஏஜ் பருவத்தினர் உணவில் அதிகம் சேர்க்கவேண்டும்.
முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய், மீன் எண்ணெய் போன்றவைகளிலும் வைட்டமின்கள் உள்ளன. சருமம், எலும்பு, பற்களின் பலத்திற்கும் வைட்டமின் அவசியம். நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் ‘சி’ சத்து பெண்களின் கூந்தலுக்கு அவசியமாகிறது. வைட்டமின் பற்றாக்குறை ஏற்பட்டால் ஆரோக்கியம் மட்டுமல்ல அழகிலும் பாதிப்பு ஏற்படும்.
இரும்பு சத்தின் தேவை ஆண்களுக்கு தினமும் 50 மி.கிராமாகவும், பெண்களுக்கு 30 மி.கிராமாகவும் இருக்கிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் இரும்பு சத்தின் தேவை அதிகமாக உள்ளது. கோழி இறைச்சி, பேரீச்சம் பழம், பிரவுன் பிரெட், கேழ்வரகு, அவல், பருப்பு- பயறு வகைகள், வேர்க்கடலை, எள், வெல்லம், கீரை வகைகளில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது.
உடலில் இரும்பு சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் ரத்தசோகை தோன்றும். அது உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து ஆளையே முடக்கிப்போட்டுவிடும் தன்மை கொண்டது. அதுபோல் உடல் வளர்ச்சிக்கும், துடிப்பான சக்திக்கும் சிங்க், அயோடின் போன்ற சத்துக்கள் அவசியம். டீன்ஏஜ் பருவத்தினர் தண்ணீர் நிறைய பருகவேண்டும். உடலில் 70 சதவீதம் தண்ணீர்த்தன்மை இருக்கிறது.
அதை சீரான நிலையில் பராமரிக்க தினமும் 15 கப் தண்ணீர் பருகவேண்டும். தண்ணீர் பருகும் அளவை குறைத்தால் உடல் ஆரோக்கியமும், அழகும் பாதிக்கப்படும். சமோசா, பப்ஸ், சிப்ஸ், கட்லெட் போன்ற பேக்கரி உணவுகளை டீன்ஏஜ் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதில் சத்து என்று சொல்வ தற்கு எதுவுமில்லை.
சர்க்கரை நோய், இதய நோய் வர ஏதுவாகும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் புற்றுநோய்க்கும் ஏதுவாகிவிடும். பேக்கரியில் கிடைக்கும் எண்ணெய் பதார்த்தங்களுக்கு பதில் அங்கேயே ஆவியில் வேகவைத்த உணவுப்பொருட்கள் கிடைத்தால் அதை வாங்கி சாப்பிடுங்கள். குளிர்பானங்கள் பருகும் ஆர்வம்கொண்டவர்கள் அதற்கு பதிலாக அப்போதே தயாரித்து தரும் பழச்சாறு வகைகளை பருகுங்கள்.
மைதா சேர்த்த பேக்கரி உணவுகளை சாப்பிடவேண்டிய நிலை ஏற்பட்டால் அத்தோடு பெருமளவு காய்கறிகளை சாப்பிடுங்கள். கூடவே நிறைய தண்ணீரையும் பருகிவிடுங்கள். ஆரோக்கியத்தை பேணினால், முதுமையிலும் மகிழ்ச்சியாக வாழலாம்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply