தினமும் உணவில் ரசத்தை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் சூப்பரான நன்மைகள்

Loading...

தினமும் உணவில் ரசத்தை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் சூப்பரான நன்மைகள்அன்றாடம் உணவில் ரசத்தை சேர்த்து வரும் போது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
தென்னிந்தியாவில் பிரபலமாக கருதப்படும் ரசம், உணவுடன் அன்றாடம் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியாமலே அதை அனைவரும் விரும்பி உண்கின்றனர்.
இது உடல் எடையை குறைப்பது, உடலுக்கு ஊட்டச்சத்து அளிப்பது, வயிற்றுப் பிரச்சனைகளை குணப்படுத்துவது என உடல்நலத்திற்கு தேவையான பல முக்கிய வேலைகளை செய்கிறது.

கனிமச்சத்துக்கள் நிறைந்தது

ரசத்தில் மக்னீசியம், காப்பர், செலினியம், ஜிங்க், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அன்றாடம் இதனை சிறிது உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஒருசில குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

குழந்தைகளுக்கும் நல்லது

குழந்தைகளுக்கு ரசம் சாதம் கொடுப்பதால், அவர்களின் செரிமானம் சீராக நடைபெற்று, அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும். மேலும் பெரும்பாலான குழந்தைக்கு முதன்முதலில் கொடுக்கும் திட உணவுகளில் முதன்மையானது ரசம் எனலாம்.

நோயாளிகளுக்கு நல்லது

நோயாளிகள் ரசத்தை எடுத்துக் கொள்வது நல்லது. நோயால் அவதிப்படும் போது காய்கறிகள் சேர்க்கப்பட்ட ரசம் சாதத்தை உட்கொண்டு வந்தால், அதில் சேர்க்கப்பட்டள்ள பொருட்கள், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டீனை அதிகரித்து, உடலை விரைவில் குணமாக்கும்.

ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் நிறைந்தது

ரசத்தில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ரசத்தில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் நிறைந்த புளி இருப்பதால், அது சருமத்திற்கு மிகவும் நல்லது.

வயிற்றுப்போக்கை சரிசெய்யும்

ரசமானது வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத் தொல்லை, செரிமான பிரச்சனை போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கக்கூடியவை. மேலும் இது மிகவும் விலை குறைவில் வேகமாக செய்து சாப்பிடக்கூடிய சமையலாதலால், தவறாமல் உணவில் சேர்த்து வாருங்கள்.

புற்றுநோய் தாக்கத்தைக் குறைக்கும்

ரசம் உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கம் குறையும். இதற்கு முக்கிய காரணம், ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் மிளகு தான். இவையே புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

மலச்சிக்கலைத் தடுக்கும்

ரசத்தை அன்றாடம் சேர்த்து வந்தால், குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். அதிலும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படும் போது, சூடாக ஒரு கப் ரசம் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

எடையைக் குறைக்க உதவும்

அன்றாடம் ரசத்தை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம். இது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும். அதிலும் அந்த டாக்ஸின்களானது வியர்வையின் மூலமாகவும், சிறுநீரின் வழியாகவும் வெளியேறும்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது

கர்ப்பிணிகள் கூட ரசத்தை உட்கொள்ளலாம். ஏனெனில் அதில் புரோட்டீன், வைட்டமின், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் ரசம் குடலியக்கத்தை சீராக இயக்கும். இதனால் கர்ப்ப காலத்தில் சந்திக்கும் பல பிரச்சனைகள் குறையும்.

வைட்டமின்கள் நிறைந்தது

ரசத்தில் முக்கியமான வைட்டமின்களான ரிபோப்ளேவின், நியாசின், வைட்டமின் ஏ மற்றும் சி, ஃபோலிக் ஆசிட் மற்றும் தியாமின் போன்றவைகள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் தான் இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply