தானியங்கி கார்களை விரைவில் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றது Volvo | Tamil Serial Today Org

தானியங்கி கார்களை விரைவில் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றது Volvo

Loading...

தானியங்கி கார்களை விரைவில் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றது Volvoகூகுள் நிறுவனம் உட்பட மேலும் சில கார் உற்பத்தி நிறுவனங்களும் சாரதி இன்றி தானாகவே பயணம் செய்யக்கூடிய கார்களை வடிவமைத்து வந்தமை அறிந்ததே.
எனினும் கூகுள் நிறுவனம் இக் கார்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் முயற்சியினை ஏற்கணவே ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது Volvo நிறுவனமும் தனது தானியங்கி கார்களை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளது.

இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள 100 தானியங்கிக் கார்களை சீனாவின் வெவ்வேறு நகரங்களில் பயணிக்கச் செய்யப்படவுள்ளது.

ஏற்கணவே கூகுள் நிறுவனம் தனது கார்களை பரீட்சிப்புக்கு உட்படுத்திய வேளை சில பின்னடைவுகளை இனங்கண்டிருந்த நிலையில் Volvo நிறுவனம் பரிசோதனை முயற்சியில் இறங்கியிருப்பதன் ஊடாக பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

Loading...
Rates : 0
VTST BN