தலை முடிக்கு

Loading...

தலை முடிக்கு*தலைக்கு செவ்வரத்தம் பூவையும் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து அரைத்து விழுதாக்கி குளிக்கும் போது தலையில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். தலை மயிர்கள் நன்றாக கறுத்து வருவதைக் காணலாம்.
*தலை முடி பிசுபிசுப்பாக இருந்தால் எலுமிச்சைச் சாற்றை பூசிக் குளிக்க பிசுபிசுப்பு நீங்கி தலைமயிர் புத்துணர்ச்சி அடைந்து அழகாக மிளிரும்.
*இப்போது அழகுக்காக நம்மில் பலர் தலைக்கு எண்ணெய் வைப்பது குறைவு. இது நமது ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். எனவே தினமும் எண்ணெய் வைத்து தலைவாரி வருவது தமது ஆரோக்கியத்தை நீண்டகாலம் பேண உதவும்.
*குடும்பத்தில் உள்ள அனைவரும் தலை சீவ ஒரே சீப்பை பயன்படுத்துவதை தவிருங்கள். காரணம் தலையில் பேன்கள், தொற்றுக் கிருமிகள், நோய்கள் என்பன மற்றவரால் நமக்கு பரவ வாய்ப்புள்ளது. எனவே நமக்கென ஒரு சீப்பை பயன்படுத்துவது நம் அனைவரினதும் நலத்தை பாதுகாக்க உதவும்.

Loading...
Rates : 0
VTST BN