தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் நெல்லி மசாஜ்

Loading...

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் நெல்லி மசாஜ்3 நெல்லிக்காயை துண்டுகளாக்கி சாறு எடுத்து, அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி வாரம் 1 முறை முடிக்கு ஹேர் பேக் போட்டு வந்தால், முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

நெல்லிக்காயை துண்டுகளாக்கி, அதனை சூரிய வெளிச்சத்தில் உலர வைத்து, பின் அதனை பொடி செய்து, மற்ற பொருட்களுடன் சேர்த்து வாரம் ஒரு முறை ஹேர் பேக் போட்டால், முடி நன்கு வளரும்.

ஒரு மேசைக்கரண்டி நெல்லிக்காய் பொடியுடன், 2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, 10 நிமிடம் ஸ்கால்ப்பில் நன்கு மசாஜ் செய்து, பின் 2 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு குளித்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்

ஒரு மேசைக்கரண்டி நெல்லிக்காய் பொடியுடன், ஒரு மேசைக்கரண்டி வெந்தயப் பொடி மற்றும் 3 மேசைக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் நன்கு தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் முடியை மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

நெல்லிக்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி? நெல்லிக்காயை சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலர வைத்து, பின் 1/2 கப் தேங்காய் எண்ணெயில் போட்டு, அதனுடன் 3 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடி சேர்த்து குறைவான தீயில், எண்ணெய் ப்ரௌன் நிறத்தில் மாறும் வரை கொதிக்க வைத்து இறக்கி, பின் அதனை குளிர வைத்து, காற்றுப்புகாத போத்தலில் ஊற்றினால், நெல்லிக்காய் எண்ணெய் ரெடி!!

வாரம் ஒருமுறை நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். அதிலும் இதனை இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் அலச வேண்டும்.

ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பூந்திக்கொட்டை பொடி, 1 டீஸ்பூன் சீகைக்காய் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து கலந்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில்
தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply