தற்போது பெண்களையும் குழந்தைகளையும் அதிகளவில் பாதிக்கும் சக்கரை நோய்

Loading...

தற்போது பெண்களையும் குழந்தைகளையும் அதிகளவில் பாதிக்கும் சக்கரை நோய்அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம், கடந்த சுமார் 25 ஆண்டுகளாக சர்க்கரை நோயானது பெண்களையும் சிறுவர்களையும் கூட அதிக அளவில் பாதிக்கின்றது என்பது தான்.

இது உண்மையிலேயே எல்லோருக்கும் அதிர்ச்சியைத் தரக்கூடிய விடயமாகும்.

பெண்களையும் குழந்தைகளையும் சர்க்கரை பற்றிக் கொள்வதற்கு முக்கிய காரணங்களாக இருப்பவை வாழ்க்கை முறை மாற்றங்களும் உணவு பழக்க வழக் கங்களும் தான் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

மரபணு அடிப்படையில், சர்க்கரை நோய் பாதிப்பது குறைந்த அளவிலேயே உள்ளது என்றாலும், இப்போது மாறுப்பட்ட உணவு பழக்கங்கள் முக்கியமாக அதிக இனிப்பு சத்துக்கள் சார்ந்த துரித உணவுகள் சர்க்கரை நோய்க்கு தூண்டுதலாக அமைந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண் மையாகும்.

உலக சுகாதார அமைப்பும் 2025 ஆண்டில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 5 முதல் 5 1/2 கோடியாக இருக்கலாம் என்று கூறுகிறது.

ஆகவே, உலகெங்கிலும் மக்களுக்கு இந்நோய் பற்றிய விழிப்புணர்ச்சி அதிகமாகவே தேவைப்படுகிறது எனலாம்.

சர்க்கரை நோயின் வகைகளையும் அறிகுறிகளையும் ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் அவசியம்.

எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தீராத தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப் பசி, அதிகம் சாப்பிட்டாலும் எடை குறைதல், எப்போதும் களைப்பும் சோர்வும் தலைச்சுற்றல் சில நேரங்களில் நினைவு இழத்தல்.

இந்த வகை சர்க்கரை நோய் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குவதால் மேலே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் 2 அல்லது 3 தங்கள் குழந்தைகளிடம் காணப்பட்டால் அன்னையர் உடனே காலம் கடத்தாமல் மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டும்.

மருத்துவர் உடனே குழந்தைக்கு இன்சுலின் செலுத்துவார். இதைச் செய்யத் தவறினால் குழந்தை கோமா என்ற நிலைக்குத் தள்ளப்படலாம். அதன் பிறகு சிகிச்சை முறைகள் கடுமையாகலாம். ஆகவே, இன்சுலின் ஊசி ஒன்றுதான் டைப் 1 சர்க்கரை நோய்க்குத் தீர்வு.

டைப் 2 வகை சர்க்கரை நோய்க்கு டைப் 1 அறிகுறிகளே மிதமாக இருக்கும். அறிகுறிகள் மிதமாக இருப்பதாலேயே இதனை அலட்சியமாக விட்டு விடக்கூடிய போக்கும் மக்களிடையே காணப்படுகிறது.

மேலும் ஆறாத ரணங்கள், ஆறாத தோல் தொற்று அந்தரங்க உறுப்புகளில் காளான் தொற்று பாதங்களில் உணர்ச்சியற்ற தன்மை, எரிச்சல் உணர்ச்சி ஆகியனவும் டைப் 2 டையாபடீசின் அறிகுறிகளாகும்.

மேலும் அதிக உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், பெற்றோர்க்கு சர்க்கரை நோய் இருத்தல் போன்ற காரணங்களும் இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யக்கூடும்.

ஏறத்தாழ 80% மக்கள் இந்நோயினை ஆரம்ப நிலையில் அறிவதில்லை. வேறு ஏதாவது ஒரு நோய்க்குச் சிகிச்சை பெறும்போதோ அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும் பொழுதோதான், சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்படுகிறது.

இதயம், கண்கள், கிட்னி போன்ற முக்கிய பகுதிகளைத் தாக்கி, அமைதியாக அழித்து விடும் இந்தச் சர்க்கரை நோய் என்பதனை உணர்ந்து, 35 வயதைக் கடந்தவர்கள், வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதே போல் டைப் 1 டைப் 2 இரண்டுமே ஆபத்தை விளைவிப்பவை தான்.

இருந்தாலும் சிகிச்சையால் கட்டுப்படுத்த முடியும் என்பதும் உண்மை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply