தரவுப் பரிமாற்ற வேகத்தில் மற்றுமொரு புரட்சி

Loading...

தரவுப் பரிமாற்ற வேகத்தில் மற்றுமொரு புரட்சிகணினி மற்றும் அவற்றின் துணைச் சாதனங்களுக்கு இடையில் தரவு கடத்தல் ஆனது பல்வேறு ஊடகங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.
இவற்றில் வழிகாட்டி ஊடகங்களுள் (Guided Media) ஒன்றான ஒளியியல் நார்கள் (Fibre Optic) ஊடாகவே எவ்வித இழப்பும் இன்று நீண்ட தூரத்திற்கு அதிக வேகத்தில் தரவுப் பரிமாற்றம் இடம்பெறுகின்றது.

தற்போது இவ் ஊடகத்தில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை புகுத்தி செக்கனுக்கு 57 ஜிகா பைட் வேகத்தில் தரவு கடத்தலை மேற்கொண்டு பொறியிலாளர் குழு ஒன்று சாதனை படைத்துள்ளது.

அதாவது அறை வெப்பநிலையிலேயே இவ் வேகத்தில் தரவு கடத்தப்படக் கூடியதாக இருப்பதுடன், புளூறே (Blue Ray) வட்டில் உள்ள தரவுகளை ஒரு செக்கனில் பரிமாற்றம் செய்ய முடியும்.

அமெரிக்காவின் Illinois பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று கடந்த 2014ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் செக்கனுக்கு 40 ஜிகா பைட் வேகத்தில் தரவுப் பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தினை உருவாக்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply