தயிர் சேமியா

Loading...

தயிர் சேமியா
தேவை­யான பொருட்கள்

சேமியா – ½ கப்,
தயிர் –- 2 மே.க
பால் – –½ கப்,
உப்பு –-தேவைக்­கேற்ப,
எண்­ணெய் –- 4 தே.க
கடுகு – – ¼ தே.க
பெருங்­காயம் – – 1 சிட்­டிகை
பச்சை மிளகாய் – -1
மல்­லித்­தழை –1 தே.க
துரு­விய கரட் –- 2 தே.க
முந்­தி­ரிப்­ப­ருப்பு – -5
உலர் திராட்சை – – 10
துரு­விய இஞ்சி – –¼ தே.க


செய்­முறை:

சேமி­யாவை தண்ணீர் சேர்த்து முக்கால் பத­மாக வேக­வைத்­தெ­டுக்­கவும். பின் நீரை வடித்­து­விட்டு, குளிர்ந்த நீரில் 2 அல்­லது 3 முறை அலசி நீரை நன்­றாக வடித்து விடவும்.

பாத்திரத்தில் எண்­ணெயைக் காய­வைத்து முந்­திரி, உலர்­ திராட்சை இரண்­டையும் சிவக்க வறுத்­தெ­டுத்த பிறகு, அதில் கடுகு, பெருங்­காயம் தாளித்து அதில் துரு­விய இஞ்சி, கறி­வேப்­பிலை,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சேமி­யாவில் சேர்க்­கவும்.

தயிரைக் கடைந்து, பால், உப்பு ஆகி­ய­வற்­றையும் சேமி­யாவில் கலந்து கிளறி பின் மல்­லித்­தழை, துரு­விய கரட், முந்­திரி,உலர்­தி­ராட்சை கொண்டு அலங்­க­ரிக்­கவும்.

இதை குளி­ர­வைத்து வைத்து சாப்­பிட்டால் இன்னும் சுவை­யாக இருக்கும். (சற்று கெட்­டி­யாக இருந்தால் மேலும் சற்று புளிப்­பில்­லாத தயிரைக் கடைந்துவிட்டு அதில் சேர்த்து பரிமாறலாம்).

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply