தன்டர்பேர்டு 500 அறிமுகத்தை ஒத்திவைக்கும்..என்பீல்டு நிறுவனம்

Loading...

தன்டர்பேர்டு 500 அறிமுகத்தை ஒத்திவைக்கும்..என்பீல்டு நிறுவனம்புதிய தன்டர்பேர்டு 500 அறிமுகத்தை ராயல் என்பீல்டு நிறுவனம் ஓர் ஆண்டு வரை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பல புதிய அம்சங்களுடன் பவர்ஃபுல்லான புதிய தன்டர்பேர்டு 500 மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு வடிவமைத்துள்ளது. இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கி்ன்றனர். இந்த ஆண்டு மத்தியில் எப்படியும் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் பண்டிகை காலத்தில் புதிய தன்டர்பேர்டு விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், புதிய தன்டர்பேர்டு 500 அறிமுகத்தை ராயல் என்பீல்டு ஓர் ஆண்டு வரை தள்ளி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னரே புதிய தன்டர்பேர்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என அந்த நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ராயல் என்பீல்டு விற்பனை செய்து வரும் கிளாசிக் 350 மற்றும் தன்டர்பேர்டு 350 மோட்டார்சைக்கிள்களுக்கு அதிக தேவை நிலவுகிறது. இதற்கு தக்கவாறு உற்பத்தி திறன் இல்லை. இந்த இரு மோட்டார்சைக்கிளுக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சம் 6 மாதங்கள் வரை இருக்கிறது.

இந்தநிலையில், காத்திருப்பு காலத்தை குறைக்கும் வகையில், சென்னையில் புதிய ஆலையை ராயல் என்பீல்டு கட்டி வருகிறது. ஆண்டுக்கு 1.50 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த புதிய ஆலையில் அடுத்த ஆண்டு உற்பத்தி துவங்கப்பட உள்ளது.

அதன் பின்னர் புதிய தன்டர்பேர்டை அறிமுகம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது ராயல் என்பீல்டு. இதனால், புதிய தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிளுக்காக காத்திருந்த வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply