தனது தாயகத்துக்கு ஏற்றுமதி செய்யும் யமஹா

Loading...

தனது தாயகத்துக்கு ஏற்றுமதி செய்யும் ‘யமஹாஇந்தியாவிலிருந்து தனது தாயகமான ஜப்பானுக்கு பைக் ஏற்றுமதியை விரைவில் துவங்குகிறது யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை ஏற்றுமதி கேந்திரமாக பயன்படுத்திக் வெளிநாடுகளுக்கு கார், பைக்குகளை ஏற்றுமதி செய்து வருகின்றன. ஆனால், ஜப்பானை சேர்ந்த யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இதற்கு ஒருபடி மேலே சென்றுவிட்டது.

ஆம். இந்தியாவிலிருந்து தமது தாய்நாடான ஜப்பானுக்கே பைக் ஏற்றுமதியை விரைவில் துவங்குகிறது யமஹா. முதலாவதாக 300 ஆர் 15 ஸ்போர்ட்ஸ் பைக்குகள் கொண்ட முதல் லாட்டை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.

ஜப்பான் மார்க்கெட்டில் இந்த பைக்குகளுக்கு வரவேற்பு கிடைத்தால், அடுத்து எப்இசட் ஸ்போர்ட்ஸ் பைக்குகளையும் ஏற்றுமதி செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனை யமஹாவின் இந்தியப் பிரிவு மேலாண் இயக்குனர் ஹிரோயகி சுஸுகி உறுதிப்படுத்தியிருக்கிறார். இதுகுறி்த்து அவர் கூறியிருப்பதாவது:

“நவீன தொழில்நுட்பங்களுடன் இந்தியாவில் தயாராகும் மோட்டார்சைக்கிள்கள் வளர்ந்த நாடுகளின் மார்க்கெட்டுக்கு மிக சாதகமான அம்சங்களை கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் எங்களது தாயகத்துக்கு ஏற்றுமதி துவங்க உள்ளோம்.

வரவேற்பை பொறுத்து பிற பைக் மாடல்களையும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். ஜப்பான் மட்டுமின்றி இதர வளர்ந்த நிலை மார்க்கெட்டுகளுக்கும் ஏற்றுமதி செய்வோம்.

ஜப்பான் மார்க்கெட்டில் ரேஸிங் மற்றும் அதிக சக்தி கொண்ட பைக்குகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில், 150சிசி ஆரம்ப நிலை ரகத்தை சேர்ந்த பைக்குகளுக்கு அதிக டிமான்ட் இருக்கிறது.

எனவே, ஆர்15பைக்குகள் மிக பொருத்தமாகவும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும் இருக்கிறது என்பதால் முதலில் ஏற்றுமதி செய்ய உள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply