தடைகளை தகர்த்தால் தானே அவர் தளபதி ஸ்பெஷல்

Loading...

தடைகளை தகர்த்தால் தானே அவர் தளபதி ஸ்பெஷல்தடைகளை தகர்த்தால் தானே அவர் தளபதி ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் அனைவரின் கனவும் சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலி தான். இந்த நாற்காலிக்கு மிக அருகில் நின்று கொண்டு இருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவர் தான் இந்த மாதத்தில் சினி உலகம் தேர்ந்தெடுத்த STAR OF THE MONTH.

இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் மகன், இயக்குனரின் மகன் என பலர் வந்தும், அடையாளம் தெரியாமல் தொலைந்தவர்கள் பலர். இதில் தனக்கென்று ஒரு அடையாளத்துடன் தன் கடின உழைப்பால் போராடி இன்று தமிழ்நாடே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு வளர்ந்தவர் தான் இளைய தளபதி.ஆரம்ப கட்டத்தில் இவரின் நடிப்பு, நடனம், ஏன் உருவ அமைப்பை கூட குறை சொல்லாத பத்திரிக்கைகள் இல்லை. ஆனால், இன்று அனைத்து பத்திரிக்கைகளுக்கும் தங்கள் விளம்பரத்திற்கு பயன்படும் அட்டை படமாக விஜய் வளர்ந்து இருப்பதே அவர்கள் அனைவருக்கும் கொடுத்த பதிலடி.ஒருவரை பற்றி பலரும் குறை கூறி கொண்டு இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அவர் ஏதோ உயரத்தை நோக்கி தான் செல்கிறார், இதை ஒரு மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே கூறினார். இந்த வாக்கியம் கண்டிப்பாக இளைய தளபதிக்கு மட்டுமே பொருந்தும்.

ஒவ்வொரு படம் ரிலிஸ் ஆகும் போதும் தங்கள் சுயலாபத்திற்காக விஜய் படங்கள் மீது வழக்கு கொடுப்பது, திரையரங்கில் பிரச்சனை என இவரை ஒடுக்க எத்தனையோ சதி வேலைகள் செய்தாலும், அத்தனை தடைகளையும் தகர்த்து எரிந்து துப்பாக்கியில் இருந்தும் வெடிக்கும் தோட்டாவாக தெறிக்க விடுகிறார் ஒவ்வொரு படத்திலும்.விஜய் என்பவர் நடிகர் என்பதை தாண்டி இன்று ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்தில் ஒருவராக தான் அனைவரும் பார்க்கின்றனர், இன்றும் விஜய்யை பலரும் அண்ணா என்று தான் அழைக்கிறார்கள், படங்களின் வெற்றியை தாண்டி தமிழ் குடுபங்களின் பாசத்தையும் வென்றவர் விஜய்.விஜய் சொல்லி அடிப்பதில் கில்லி, பாக்ஸ் ஆபிஸை அறுவடை செய்யும் கத்தி, சிவகாசியில் வெடிக்கும் சரவெடி, 6 நாட்களில் தெறி அடித்து நொறுக்கியது ரூ 100 கோடி. புறம் பேசுபவர்கள் ஆயிரம் பேசினலும், உன் அழுங்காத சிரிப்பால் அனைத்தையும் ஓரங்கட்டி உன் வளர்ச்சியை அவர்களையே அன்னாந்து பார்க்க வைத்து விடுவாய்.என்றும் மாறாத இளமை, என்றும் குறையாத ரசிகர்கள் என தமிழ் சினிமாவில் தனி சாம்ராஜ்ஜியத்தையே நடத்தி வரும் இளைய தளபதியின் வளர்ச்சியில் இன்று போல் என்றும் வெற்றிப்படிக்கட்டுக்கள் அமைய சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply