டைட்டன் துணை கிரகம் பூமியை போன்ற அமைப்பு உடையது

Loading...

டைட்டன்  துணை கிரகம் பூமியை போன்ற அமைப்பு உடையதுசனி கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா விண்வெளி மையம் ஹாசினி ஹைஜீன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியது. அதன் மூலம் சனி கிரகத்தின் ‘டைட்டன்’ என்ற துணை கோளை கடந்த 2004-ம் ஆண்டு நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

அங்கு மீத்தேன் உறைந்த நிலையிலும், வாயு நிலையிலும் அதிகளவு இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டைட்டன் துணை கிரகம் பூமியை போன்ற இடஅமைப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இங்கு பல ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் அவற்றில் தண்ணீருக்கு பதிலாக மீத்தேன் திரவ நிலையில் ஓடுகிறது.

டைட்டனின் மேற்பரப்பில் அதிசயிக்கதக்க வகையில் பல எரிமலைகள் உள்ளன. மேலும் அங்கு போதுமான தட்பவெப்ப நிலையும் பல கனிம வளங்களும் உள்ளன. ஆனால், அது பார்ப்பதற்கு சனி கிரகத்தின் சந்திரன் போன்று உள்ளது.

டைட்டன் துணை கோளை பூமியில் இருந்து பார்க்க முடியாது. டைட்டன் துணை கோள் குறித்து எம்.ஐ.டி. மற்றும் டென்னீஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply