டிவி நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் வசதியுடன் டிஷ்

Loading...

டிவி நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் வசதியுடன் டிஷ்இந்தியாவில் வீடுகளுக்கு டிவி சேவையை வழங்கும் டிஷ் டிவி நிறுவனம், டிவி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யக்கூடிய ஒரு புதிய பதிவு செய்யும் சாதனத்தைக் களமிறக்க இருக்கிறது. அந்த புதிய சாதனத்திற்கு டிஷ்+ என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் டிவி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய விசிஆர் பயன்படுத்தப்பட்டது.

விசிஆர் வந்த பிறகு வேறு எந்த ஒரு சாதனமும் பிரபலமாகவில்லை. எனவே இந்த புதிய டிஷ்+ மக்களிடம் அமோக வரவேற்பைப் பெறும் என்று டிஷ் டிவி நம்புகிறது. மேலும் இந்த சாதனம் 4ஜிபி யுஎஸ்பி ட்ரைவுடன் வருகிறது. இந்த சாதனம் ரூ.1690க்கு விற்கப்பட இருக்கிறது.

டிஷ் டிவியின் தலைமை இயக்குனர் ஆர்.சி. வெங்கடேஷ் கூறும் போது இந்த டிஷ்+ இந்தியாவில் உள்ள 42 முக்கிய மாநகரங்களில் இந்த டிஷ்+ வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் டிஷ் டிவியின் முக்கிய அதிகாரி சலில் கபூர் கூறுகையில், இந்த டிஷ்+யைக் கொண்டு சிறிய அறைகளில் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் மிகத் தெளிவாக மற்றும் துல்லியமாக டிவி நிகழ்ச்சிகளை பதிவு செய்யலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த சாதனம் குறைந்த விலையி்ல் வருவதால் பலர் இதை வாங்குவர் என்று நம்புகிறார்.

இந்த டிஷ்+ யுஎஸ்பி ட்ரைவுடன் வருவதால் இதை எளிதாக டிவியில் இணைக்க முடியும். அதன் மூலம் டிவி நிகழ்ச்சிகளை மிக எளிதாகப் பதிவு செய்ய முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply