டில் கிரீன்ஸ் பாத்

Loading...

டில் கிரீன்ஸ் பாத்தேவையானவை:
கோதுமை ரவை:
ஒரு கப், வெந்தயக்கீரை – ஒரு கட்டு (சிறியது), கேரட் துருவல், கோஸ் துருவல் – தேவையான அளவு, வெங்காயம் – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 4, எண்ணெய், கடுகு, பெருங்காயம் – தாளிக்க தேவையானஅளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெந்தயக்கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து… துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கீரை, கேரட், கோஸ் துருவலை சேர்த்து வதக்கவும். பிறகு, இரண்டு கப் தண்ணீர் விட்டு, கொதி வந்ததும் உப்பு, கோதுமை ரவையை சேர்த்து நன்கு வேகவிட்டு கிளறி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply