டியூவல் சிம் வசதியுடன் கூடிய புதிய கோபியன் டேப்லட்

Loading...

டியூவல் சிம் வசதியுடன் கூடிய புதிய கோபியன் டேப்லட்டியூவல் சிம் வசதி கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது கோபியன் நிறுவனம். மெர்குரி மேஜிக் என்ற பெயர் கொண்ட டியூவல் சிம் வசதி கொண்ட டேப்லட்டை, எலக்ட்ரானிக் சாதன உலகிற்கு அறிமுகம் செய்கிறது கோபியன் நிறுவனம்.

இந்த டேப்லட் 5 இஞ்ச் திரை வசதியினையும் எளிதாக வழங்கும். இந்த டேப்லட்டிற்கு மெர்குரி மேஜிக் என்ற பெயரையும் விட, டியூவல் டேப்லட் என்ற பெயர் கூட பொருத்தமானது தான். இதில் டியூவல் சிம் வசதி இருப்பது மட்டுமல்லாமல், டியூவல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ சாட் செய்ய முகப்பு கேமரா மட்டும் அல்லாமல், 12 மெகா பிக்ஸல் கொண்ட மெயின் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய நேரம் இன்டர்நெட் வசதியினை பயன்படுத்தினாலும், சிறப்பான ஆற்றலை வழங்க இதில் நீடித்து உழைக்கும் பேட்டரியும் உள்ளது. இதனால் 13 மணி நேரம் டாக் டைம் மற்றும் 15 நாட்கள் ஸ்டான்-பை
டைமினையும் வழங்கும்.

டேப்லட்டின் தொழில் நுட்ப வசதிகளையும் விட, அதன் இயங்குதளம் மிக முக்கியமானதாக இருக்கிறது. இதில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குதளத்தின் வசதியினை எளிதாக பெறலாம்.

இதில் டேப்லட் என்பதே எளிதாக கையாளத் தான். இதில் 140 கிராம் எடை கொண்ட இந்த டேப்லட்டினை இன்னும் எளிதாக கையாளலாம். 1 வருட வாரண்டியுடன் இந்த கோபியன் மெர்குரி டேப்லட் ரூ. 12,700 விலையில் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply