டிசம்பர் மாதம் அறிமுகமாகும் நின்டென்டோ கேமிங் சாதனம்

Loading...

டிசம்பர் மாதம் அறிமுகமாகும் நின்டென்டோ கேமிங் சாதனம்நின்டென்டோ டபிள்யூஐஐ யூ கேமிங் எலக்ட்ரானிக் சாதனத்திற்காக வாடிக்கையாளர்கள் பெரிதும் காத்திருக்கின்றனர். கம்ப்யூட்டர் முன்பு வேலை அதிகரித்து கொண்டே செல்வதனால், பொழுதுபோக்காக சில விஷயங்களை பயன்படுத்த வேண்டி உள்ளது.

இதனால் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமிங் எலக்ட்ரானிக் சாதனங்கள் தேவைப்படுகின்றது. நின்டென்டோ டபிள்யூஐஐ யூ கேமிங் எலக்ட்ரானிக் சாதனம் கூடிய விரைவில் வெளியாவதாக ஒரு செய்தி வெளியாகியது.

ஆனால் இதன் வெளியீடு சற்று தாமதமாகும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த கேம்பேட் 6.2 இஞ்ச் தொடுதிரை வசதியினை கொண்டது. கேமிங் தொழில் நுட்ப சாதனமாக இருந்தாலும் முகப்பு கேமராவையும் வழங்கும். நிஜமாகவே விளையாடுவது போன்ற ஓர் உணர்வினை இதன் எல்சிடி தொழில் நுட்பம் கொண்ட திரையின் மூலம் பெறலாம்.

அதோடு இந்த கேமிங் எலக்ட்ரானிக் சாதனம் சிறந்த என்எப்சி, மோஷன் சென்ஸார் போன்ற தொழில் நுட்ப வசதிகளையும் எளிதாக பெற முடியும்.

நின்டென்டோ டபிள்யூஐஐ யூ கேமிங் எலக்ட்ரானிக் சாதனம் அமெரிக்காவில் நவம்பர் மாதமும், ஐரோப்பா நாடுகளில் டிசம்பர் 21ம் தேதியும் வழங்கப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply