டார்க் சாக்லெட் ஃபேஸ் மாஸ்க்

Loading...

டார்க் சாக்லெட் ஃபேஸ் மாஸ்க்சாக்லேட் உங்கள் தோலை பாதுகாப்பது மட்டுமின்றி சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் குறைக்க உதவும். சாக்லேட்டில் வைட்டமின்கள் மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் பாலிஃபினாலைக் உள்ளது. இந்த டார்க் சாக்லெட் ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் ஊட்டச்சத்தை தருகிறது. இதை ஃபேஸ் மாஸ்க்கை வீட்டிலிலேயே போட்டுக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

தேன் – கால் கப்பில் பாதியளவு
டார்க் சாக்லெட் – 5 துண்டுகள் (உருகியது)
ஓட்ஸ் – 2 ஸ்பூன் (மிக்சியில் பொடித்து கொள்ளவும்)
தயிர் – 1ஸ்பூன்

செய்முறை :

• மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் நன்றாக மிக்ஸ் செய்யவும்.
• மிகவும் மென்மையாக, வட்ட வடிவத்தில் முகத்தில் மசாஜ் செய்யவும்.
• 20 நிமிடங்கள் கழித்து சூடான தண்ணீரால் முகத்தை கழுவி விடவும்.
இந்த பேஸ் மாஸ்க் போட்டிருக்கும் போது பேச கூடாது. முகத்தில் அசைவு கொடுக்க கூடாது.
இந்த மாஸ்க்கை வாரம் ஓருமுறை செய்து வந்தால் உங்கள் சருமம் மென்மை அடைவதுடன், முக சுருக்கத்தையும் மறைய செய்யும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply