டஸ்ட்டர் எஸ்யூவியை லிமோசின் காராக மாற்றிய மாணவர்களின் சாதனை

Loading...

டஸ்ட்டர் எஸ்யூவியை லிமோசின் காராக மாற்றிய மாணவர்களின் சாதனைடஸ்ட்டர் எஸ்யூவியை நாட்டின் அதிபர்கள் மற்றும் பெருந்தலைவர்கள் பயன்படுத்தும் லிமோசின் ரக காராக மாற்றிக் காட்டி அசத்தியுள்ளனர் ரினால்ட் வடிவமைப்பு மையத்தில் பயிலும் மாணவர்கள்.

காம்பெக்ட் ரக எஸ்யூவியாக டஸ்ட்டர் விற்பனை செய்யப்படுகிறது. ஐரோப்பிய மார்க்கெட்டில் டேஸியா பிராண்டில் டஸ்ட்டர் எஸ்யூவியை ரினால்ட் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், ரினால்ட்டின் தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த 23 மாணவர்கள் தங்களது புரொஜெக்ட்டுக்காக டஸ்ட்டர் எஸ்யூவியை லிமோசின் காராக மாற்றிக் காட்டி அசத்தியுள்ளனர். 4 மாதங்கள் அயராத உழைப்பில் இந்த லிமோசின் காரை அவர்கள் உருவாக்கியிருக்கின்றனர்.

டஸ்ட்டரின் பி பில்லருக்கு அடுத்த பின்பகுதியை வெட்டி எடுத்துவிட்டு, கூடுதலாக 1.5 மீட்டர் (59 இஞ்ச்) கூடுதலாக அலுமினிய தகடுகளை பொருத்தி டஸ்ட்டர் லிமோசின் காராக மாற்றியுள்ளனர். மேலும், மெட்டே பினிஷிங் செய்யப்பட்டுள்ளதால் டஸ்ட்டர் லிமோசின் காரின் வெளிப்புற வண்ணம் கண்ணை கவரும் வகையில் இருக்கிறது. இதுதவிர, ஏ பில்லரையொட்டி, சிறிய அலுமினிய பிளேட் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது கூடுதல் கவர்ச்சி.

பெரிய அறையை போல் காட்சி தரும் டஸ்ட்டர் லிமோசின் காரின் உட்புறம் முழுவதும் கருப்பு, வெள்ளையில் இன்டிரியர் டெக்கரேஷன் செய்துள்ளனர். வசதியாக அமர்ந்து செல்ல 4 கிங் சைஸ் இருக்கைகள் உள்ளன. மேலும், டூவல் டோன் ஏசி, சிறிய குளிர்சாதன பெட்டி, மொபைல்போன், டேப்லெட் கம்ப்யூட்டர், சிறிய டேபிள் ஆகியவை கூடுதல் அம்சங்கள்.

பொழுதுபோக்குக்காக டிவி திரையும் இருக்கிறது. இந்த காரில் வைஃபை இன்டர்நெட் வசதியும் உண்டு. நீளம் அதிகமானாலும் சாதாரண டஸ்ட்டரில் பொருத்தப்படும் அதே 16 இஞ்ச் அலாய் வீல்தான் பொருத்தப்பட்டுள்ளது. காம்பெக்ட் ரக டஸ்ட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின்தான் லிமோசின் மாடலிலும் பொருத்தியுள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply