டயட்டில் இருக்கீங்களா இதையெல்லாம் சாப்பிடாதீங்க

Loading...

டயட்டில் இருக்கீங்களா இதையெல்லாம் சாப்பிடாதீங்கஉடல் எடையை குறைக்க தீவிரமாக பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது சில உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.
தற்போது உடல் எடையை குறைக்க பலரும் சிரமப்படுகின்றனர். சில தினங்கள் வாயை கட்டிப்போட்டு வைத்தாலும், தெருக்களில் விற்கும் உணவுப் பொருட்களை வாரம் ஒரு முறையாவது வாங்கி சுவைத்து விடுகிறார்கள்.
இதன் காரணமாக உடல் எடையை குறைக்க எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போய்விடும். அந்த வகையில் டயட் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களை பற்றி பார்க்கலாம்.


பிஸ்கட்

உங்களுக்கு பிஸ்கட் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக்கலாம். ஆனால் பிஸ்கட்டுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதுவும் உடல் எடையைக் குறைக்க தடையை ஏற்படுத்தும்.க்ரனோலா

க்ரனோலா பாரில் கலோரிகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆகவே எடையைக் குறைக்க கடுமையான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது க்ரனோலா பார் உட்கொண்டால், அது எடையைக் குறைக்கவிடாமல் தடுக்கும், ஆகவே இதனை தவிர்க்க வேண்டும்.பொரித்த மசாலா சிப்ஸ்

சுவையான இந்த மசாலாக்கள் சேர்க்கப்பட்ட சிப்ஸ்களை டயட்டில் இருக்கும் போது உட்கொண்டு வந்தால், அது உடலில் கலோரிகளின் அளவை அதிகரித்து, உடல் எடையைக் குறைப்பதில் இடையூறை ஏற்படுத்தும், எனவே இவற்றை தவிர்க்க வேண்டும்.தயிர்

சிலருக்கு தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிட மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த செயலை டயட்டில் இருக்கும் போது பின்பற்றக்கூடாது.
ஏனெனில் சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைப்பதோடு, அதனை தயிருடன் சேர்த்து உட்கொண்டால், எடையைக் குறைக்க தடையை ஏற்படுத்தும்.ஸ்மூத்தி ஜூஸ்

ஸ்மூத்தி ஜூஸ் குடிப்பது ஆரோக்கியம் தான். ஆனால் அதனை டயட்டில் இருக்கும் போது அளவுக்கு அதிகமாக குடிப்பது நல்லதல்ல. மேலும் இந்த வகையான பானங்கள் நம்மை அதற்கு அடிமைப்படுத்திவிடும்.சோடா

தற்போது கார்போனேட்டட் பானங்களான சோடாக்களை பருகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவற்றை பருகுவதே மிகவும் ஆபத்து, அதிலும் எடையைக் குறைக்கும் போது பருகினால், உடலின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படுமே தவிர, எடை குறையாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.


வாழைப்பழ சிப்ஸ்

சிலர் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதை விட, வாழைப்பழ சிப்ஸ் சாப்பிடுவது நல்லது என்று சொல்வார்கள். ஆனால் வாழைப்பழ சிப்ஸ் கூட எண்ணெயில் பொரிப்பதால், இதுவும் ஆரோக்கியமற்றது.


உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ்
நட்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியம் தான். ஆனால் உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ் சாப்பிடுவது நல்லதல்ல. அதிலும் டயட்டில் இருக்கும் போது சாப்பிடுவது முற்றிலும் பலன் தராது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply