ஜெனரல் மோட்டார்ஸ்சின் புதிய செயில் ஹேட்ச்பேக் கார்

Loading...

ஜெனரல் மோட்டார்ஸ்சின் புதிய செயில் ஹேட்ச்பேக் கார்மஹாராஷ்டிர மாநிலம், தலேகானில் உள்ள தொழிற்சாலையில் புத்தம் புதிய செயில் ஹேட்ச்பேக் காரின் உற்பத்தியை துவங்கிவிட்டது ஜெனரல் மோட்டார்ஸ்.

அடுத்த மாதம் செவர்லே பிராண்டில் செயில் என்ற புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வருகிறது. ஜெனரல் மோட்டார்சின் சீனா கூட்டாளியான எஸ்ஐஏசி நிறுவனத்தின் கார் மாடல்தான் செயில்.

சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்ட செயில் அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் தனது கேம் சேஞ்சர் காராக கருதி மிகுந்த நம்பிக்கையுடன் செயிலை களமிறக்க உள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். சோதனை ஓட்டங்கள் அனைத்தும் முடிந்து தற்போது உற்பத்தி நிலைக்கு சென்றுவிட்டது செயில்.

தலேகானில் உள்ள தொழிற்சாலையில் புதிய செயில் உற்பத்தி துவங்கப்பட்டு விட்டது. இந்த புதிய கார் விரைவில் ஷோரூம்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் மாருதி ஸ்விப்ட் மார்க்கெட்டில் புதிய செவர்லே செயில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆட்டோமொபைல் துறையினர் ஆருடங்கள் கூறி வருகின்றனர்.

செவர்லே பீட் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஸ்விப்ட், புன்ட்டோ கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஃபியட்டின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் புதிய செயில் விற்பனைக்கு வர இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply