ஜவ்வரிசி பாயசம்

Loading...

ஜவ்வரிசி பாயசம்

தேவையானவை:
ஜவ்வரிசி – ஒரு கப், வெல்லம் – ஒன்றரை கப், தேங்காய் – ஒன்று (துருவி பால் எடுக்கவும்), முந்திரி – 10, ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.


செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான நீர் ஊற்றி ஜவ்வரிசியை வேகவிடவும் (கட்டி தட்டாமல பார்த்துக் கொள்ளவும்). வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, ஜவ்வரிசியுடன் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும்.குறிப்பு:
தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்க விடக் கூடாது. பொதுவாக பால், சர்க்கரை சேர்த்து ஜவ்வரிசி பாயசம் செய்வார்கள். செட்டிநாட்டில் வெல்லம் – தேங்காய்ப் பால் சேர்ப்பது ஸ்பெஷல்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply