சௌ சௌ பாயாசம்

Loading...

சௌ சௌ பாயாசம்

தேவையான பொருட்கள் :

சௌ சௌ – 100 கிராம்
பால் – 1 கப்
சீனி – சிறி­த­ள­வு
முந்திரி – 5-10
திராட்சை – 10
நெய் – சிறி­த­ள­வு
கன்டென்ஸ்ட் மில்க் – சிறி­த­ள­வு
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகைசெய்­முறை :

சௌ சௌவை சுத்தம் செய்து தோல் நீக்கி துண்டுத் துண்டுகளாக வெட்டி, வேக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும்.

பாலை சுண்டக் காய்ச்சி அதில் வேக வைத்த சௌ சௌவை மசித்து சேர்க்கவும்.

நன்கு கொதித்தவுடன் சீனி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கன்டென்ஸ்ட் மில்க், ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.

சுவையான சௌ சௌ பாயாசம் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply