சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்…

Loading...

‘சோனி’ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்…புதிய ஸ்மார்ட்போனை வெளியிட இருக்கிறது சோனி நிறுவனம் என்றவுடன், அந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கும் என்று அனைவரின் எதிர்பார்ப்பும் திரும்பும்.

ஆனால் சோனி நிறுவனம் வெளியிட இருக்கும் எக்ஸ்பீரியா ஜிஎக்ஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் கொண்டது.

இந்த எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் மொபைல் சந்தைகளில் வெளியிடப்படும். இதன் 4.6 அகன்ற திரை 720 X 1280 பிக்ஸல் துல்லியத்தில் தகவல்களை தெளிவாக காட்டு்ம். மல்டி தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், தேவையான தொழில் நுட்ப வசதியினை வாரி வழங்கும்.

இந்த எக்ஸ்பீரியா ஜிஎக்ஸ் ஸ்மார்ட்போனில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு முக்கிய வசதியே இதன் கேமரா என்று சொல்லலாம். இதில் 13 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் ஏராளமான புகைப்படத்தினை எடுக்கலாம். இதன் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் எளிதாக பெறலாம். அதிக பிக்ஸல் கொண்ட கேமரா மட்டும் அல்லாமல் இதில் 1.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

லித்தியம் அயான் 1,700 எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 16 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதியினை கொடுக்கும். இதில் இன்டர்நெட் வசதியினை பெற வைபை தொழில் நுட்ப வசதியும் உள்ளது.

நிறைய தொழில் நுட்ப வசதிகளை கொண்ட இந்த சோனி எக்ஸ்பீகரியா ஜிஎக்ஸ் ஸ்மார்ட்போன் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை விவரம் ஏதும் இன்னும் கொடுக்கப்படவில்லை.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply