சோனியின் அறிமுகத்தில் புதிய எசெக்ஸ் 850 பிரேவியா டிவி

Loading...

சோனி’யின் அறிமுகத்தில் புதிய எசெக்ஸ் 850 பிரேவியா டிவிபுதிய பிரேவியா வரிசை எச்எக்ஸ்-850 டிவியினை வழங்குகிறது சோனி நிறுவனம். இந்த டிவியில் உயர்ந்த தொழில் நுட்ப வசதியினை எளிதாக பெறலாம்.

ஏற்கனவே சோனி நிறுவனம் டிவி போன்ற சாதனங்களை சிறப்பாக வழங்குவதில் மக்களிடம் தனி வரவேற்பினையும் பெற்றுள்ளது. சோனி அறிமுகம் செய்துள்ள இந்த எச்எக்ஸ்-850 டிவியில் மூன்று விதமான இஞ்ச் திரையினை கொண்ட மாடல்கள் உள்ளது. இதன் ஒவ்வொரு மாடலும் ஒவ்வொரு விலையினை கொண்டுள்ளது.

இதில் சிறப்பான 3டி தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த டிவியின் மூலம் பெறும் காட்சிகளை தெளிவாகவும், துல்லியமாகவும் பெற முடியும்.

3டி சூப்பர் துல்லியத்தினை இந்த டிவியில் பெறலாம். இன்னும் சுருக்கமாக சொல்ல போனால் இது ஒரு இன்டர்நெட் டிவி. இன்-பில்ட் பிரவுசர் வசதி உள்ளதால் மிக சுலபமாக சமூக வலைத்தளம் போன்றவற்றினை பயன்படுத்த முடியும்.

55 இஞ்ச் கொண்ட எச்எக்ஸ்-850 டிவியினை ரூ. 2,09,900 விலையிலும், 46 இஞ்ச் திரை வசதி கொண்ட எச்எக்ஸ்-850 டிவியினை ரூ. 1,23,900 விலையிலும் மற்றும் 40 இஞ்ச் எச்எக்ஸ்-850 டிவியினை ரூ. 93,900 விலையிலும் பெறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply