சொக்லேட் ஸ்பொஞ்ச் கேக்

Loading...

சொக்லேட் ஸ்பொஞ்ச் கேக்
தேவையான பொருட்கள் :

மைதா மா – 1/2 கப்
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
புளித்த தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
கொக்கோ பௌடர் – 1 டேபிள் ஸ்பூன்
கருப்பட்டி – 1/2 கப் (பொடி செய்தது)
எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1/4 கப் (உருக வைத்தது)
தண்ணீர் – 1/4 கப்


செய்முறை :

முதலில் பேக்கிங் சோடாவை, புளித்த தயிரில் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மைதா மாவில் கொக்கோ பௌடரை போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி, மைக்ரோ ஒவனில் வைத்து 1 நிமிடம் சூடேற்றி இறக்க வேண்டும்.

பின்னர் அதில் கருப்பட்டி மற்றும் உருக்கி வைத்துள்ள வெண்ணெய் சேர்த்து கட்டிகள் சேராதவாறு கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் மைதா கலவை, தயிர் கலவை மற்றும் எசன்ஸ் ஆகியவற்றை மெதுவாக சேர்த்து மென்மையாக கிளறிவிட வேண்டும்.

இறுதியில் பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, பின் கிளறி வைத்துள்ள மாவை ஊற்றி, மைக்ரோ ஒவனில் வைத்து 4 நிமிடங்கள் பேக் செய்து இறக்கி, 10 நிமிடங்கள் கழித்து பரிமாறினால், சொக்லேட் ஸ்பொஞ்ச் கேக் ரெடி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply