சைனீஸ் சிக்கன் பக்கோடா

Loading...

சைனீஸ் சிக்கன் பக்கோடா
தேவையான பொருட்கள்:

கோழி கறி – 8 துண்டுகள்
வெங்காயம் – சிறிது
இஞ்சி – ஒரு தேக்கரண்டி
பூண்டு – ஒரு தேக்கரண்டி
சில்லி பேஸ்ட் – ஒரு மேசைக்கரண்டி
முட்டை – ஒன்று
ஸ்ப்ரிங் ஆனியன் – சிறிது
கார்ன் ஃப்ளார் – 2 தேக்கரண்டி
வெள்ளை மிளகு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
அஜினோமோட்டோ – சிறிது (விரும்பினால்)
மைதா – சிறிது


செய்முறை :

கறியை முள் இல்லாமல் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கறியுடன் இஞ்சி, பூண்டு, சில்லி பேஸ்ட், வெங்காயம், வெள்ளை மிளகு, உப்பு, அஜினோமோட்டோ போட்டு பிரட்டவும். அதனுடன் கார்ன் ஃப்ளார், மைதா, முட்டை சேர்த்து நன்கு பிரட்டவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்திருக்கும் கறியை போட்டு பொரித்து எடுக்கவும்

சுவையான சைனீஸ் சிக்கன் பக்கோடா தயார்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply