செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கப் போகும் சீனா

Loading...

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கப் போகும் சீனாசெவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி பணிகளை தொடங்கும் இயந்திரத்தை 2020ம் ஆண்டு இறக்க தாங்கள் தயராகி வருவதாக சீனாவின் லட்சிய விண்வெளித் திட்டத்தின் பிரதான நிர்வாகி தெரிவித்துள்ளார்.

இந்த பணிகளை U.S. Viking 1 நான்கு தசாப்தங்களுக்கு முன்னரே செய்துவிட்டாலும் இது மறுபடியும் வரலாறு படைக்கும் ஒரு திட்டம் என்று சீன தேசிய விண்வெளி மையத்தின் தலைவர் க்சூ டாஸ்ஹி கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் முழு உதவுடன் இந்த பணி முழுவீச்சில் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விண்வெளி தொழிநுட்பம் மூலம் ஊடுருவல், தொலை உணர்வு மற்றும் தகவல் தொடர்பு பகுதிகளில் மக்களுக்கு உதவும் வகையில் ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும். அதேபோல் ஒரு நிரந்தர விண்வெளிநிலையத்தையும் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply