செவ்வாய் கிரகத்திலிருந்து கலர் போட்டோ அனுப்பியது கியூரியாசிட்டி

Loading...

செவ்வாய் கிரகத்திலிருந்து கலர் போட்டோ அனுப்பியது கியூரியாசிட்டிசெவ்வாய் கிரகத்தில் இருந்து கலர் போட்டோவை விண்கலம் அனுப்பியது. பூமியில் இருந்து 57 கோடி கி.மீட்டர் தூரத்தில் செவ்வாய் கிரகம் உள்ளது. இங்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறது.

இங்கு மனிதர்கள் வாழ முடியுமா? என ஆய்வு மேற்கொள்ள கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கியூரியா சிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியது. ஒரு டன் எடையுள்ள அந்த விண்கலம் மணிக்கு 20 ஆயிரத்து 800 கி.மீட்டர் வேகத்தில் சென்று 8 மாத பயணத்துக்கு பின் அமெரிக்க நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை செவ்வாய் கிரகத்தில் காலே பள்ளத்தாக்கில் மலைப் பகுதியில் பத்திரமாக தரை இறங்கியது.

தரை இறங்கிய சில நிமிடங்களில் செவ்வாய் கிரகத்தில் இருந்து போட்டோக்களை எடுத்து அனுப்பியது. அவை கறுப்பு- வெள்ளை படங்களாக இருந்தன. செவ்வாய் கிரகத்தில் சூரியன் மறைவதையும், அதை தொடர்ந்து கியூரியா சிட்டி விண்கலத்தின் நிழல் மலை மீது விழுந்து இருந்த காட்சியும் படமாகி இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) முதன் முறையாக கலர் போட்டோவை எடுத்து அனுப்பியுள்ளது. இது 2 1/2 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவாக இருந்தது. அது தெளிவாக இல்லாமல் மங்கலாக இருந்தது. அது கியூரியாசிட்டி விண்கலத்தின் மேற்பரப்பு தோற்றமும், தெளிவான வீடியோ படங்களை விண்கலம் விரைவில் எடுத்து அனுப்பும் என விஞ்ஞானி மைக்கேல் மாலின் தெரிவித்தார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply