செரிமானத்தை தூண்டும் கரும்பு

Loading...

செரிமானத்தை தூண்டும் கரும்புஉடலுக்கு குளுமையை தரக்கூடியதும், செரிமானத்தை தூண்டும் தன்மை உடையதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்க கூடியதும், விஷக்கடிக்கு மருந்தாக அமைவதும், ஊட்டச்சத்து மிக்கதுமான கரும்புவின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம். பொங்கல் பண்டிகையின்போது பயன்படுத்தும் முக்கிய பொருளாக கரும்பு விளங்குகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கரும்பு சாறை பயன்படுத்தி செரிமானத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

கரும்பு சாறு,
எலுமிச்சை,
இஞ்சி.
ஒரு டம்ளர் கரும்புச் சாறு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது எழுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலக்கவும். உணவுக்கு பின்னர் இதை எடுத்துக் கொண்டால் ரத்தம் சுத்தமாகும். செரிமானத்தை தூண்டும். பொங்கலின்போது சாப்பிடும் உணவுகள் செரிக்கவும், வயிற்று நோய்களில் இருந்து பாதுகாக்கவும் இது உதவுகிறது. இந்த சமயத்தில் கரும்பு அதிகளவில் கிடைக்கும் என்பதால் அதை நன்றாக பயன்படுத்தி கொள்ளலாம்.
50 மில்லி கரும்பு சாறுடன், ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டால், உடல் எரிச்சல் அடங்கி குளுமை பெறும். கை, கால் எரிச்சல் சரியாகும். பல்வேறு சிறப்புகளை கொண்ட கரும்புவின் வேரை பயன்படுத்தி நீர் சுருக்கு, சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
வேரில் மண் இருக்கும் என்பதால் தண்ணீரில் போட்டு நன்றாக அலசி எடுத்துக் கொள்ளவும். ஒருபிடி அளவுக்கு வேர் எடுத்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி தேன் சேர்த்து குடித்தால், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் கலந்து போகுதல், வலியோடு சிறுநீர் செல்லுதல் போன்றவை சரியாகும். சிறுநீர் பெருக்கியாக விளங்கும் கரும்பு தொற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது.
‘கரும்பு தின்ன கூலியா’ என்ற பழமொழிக்கு ஏற்ப அனைவரும் விரும்பி உண்ணக் கூடியது கரும்பு. மிகுந்த சுவையான இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. செரிமானத்தை தூண்டுவதுடன், உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
கரும்பில் இருந்து எடுக்க கூடிய காடியை பயன்படுத்தி பூச்சிக்கடிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். கரும்பு காடி என்பது கரும்பு சாறை புளிக்க வைத்து தயாரிப்பார்கள். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த கரும்பு காடியை பூச்சிக்கடி, தேள்கடி உள்ள இடத்தில் தடவினால் விஷம் முறியும். வலியும் வீக்கமும் குறையும். கரும்புவின் வேர் பகுதி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் என்பதால், நமக்கு கரும்பு கிடைக்கும்போது அதன் வேர்களை சேகரித்து காயவைத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply