செப்டம்பரில் அறிமுகமாகும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

Loading...

செப்டம்பரில் அறிமுகமாகும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்புதிய விண்டோஸ்-8 ஸ்மார்ட்போனை வருகிற செப்டம்பர் மாதம், நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிம்பையன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையே பொதுவாக நோக்கியா நிறுவனம் வழங்கி வந்தது. ஆனால் ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டிகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன்

உலகில் சிறப்பான இடத்தினை பிடிக்கும் பொருட்டு, பல முயற்சிகள் செய்து வருகிறது நோக்கியா நிறுவனம். பல மாதங்களாக நோக்கியாவின் விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவதாக தகவல்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் வருகிற செப்டம்பர் மாதம் நோக்கியா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம், பிளாக்பெர்ரி-10 இயங்குதளம் போன்று ஸ்மார்ட்போன் உலகில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதையெல்லாம் கடந்து நோக்கியா வெற்றியை அடைந்தே ஆக வேண்டும். ஏனெனில் மொபைல் மார்கெட்டில் 14 ஆண்டு காலமாக சாம்சராஜ்ஜியம் நடத்தி வந்த நோக்கியா, இந்த ஆண்டு பல சரிவுகளை
சந்தித்து வருகிறது.

ஆப்பிள், சாம்சங், பிளாக்பெர்ரி போன்ற பல நிறுவனங்களின் படைப்புகளுக்கு மத்தியில் நோக்கியா போட்டியிட தாயாராகி வருகிறது. இதனால் நோக்கியா நிறுவனம் அடுத்து வெளியிடும் விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் சிறப்பான வசதிகளுடன், வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply