சூரியனை சுற்றி தோன்றிய வண்ணமிகு வட்டம் பயம் கலந்த வியப்பில் மக்கள்

Loading...

சூரியனை சுற்றி தோன்றிய வண்ணமிகு வட்டம் பயம் கலந்த வியப்பில் மக்கள்திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று காலையில், ‘சூரியனைச் சுற்றி வண்ணமிகு ஒளிவட்டம் தென்பட்டது. இதை உள்ளூர் மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து, புகைப்படம்’ எடுத்தனர். அதேசமயம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ஆனால் இது வழக்கமான இயற்கை நிகழ்வுதான் என்றும் பீதி அடைய தேவையில்லை என்றும் வானியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள விஞ்ஞானிகள் கூறுகையில்,

பூமியில் இருந்து 5 கி.மீ., உயரத்தில் உள்ள மேகங்களின் வெப்பநிலை குறையும் போது, அதில் உள்ள நீர், சிறிய, சிறிய பனித் துகள்களாக மாறும். இந்த காலகட்டத்தில் சூரிய ஒளி அதில் படும்போது, வானவில்லை போன்ற வண்ணமிகு ஒளிவட்டம் தோன்றும். இதன் அளவை நாங்கள் 22 டிகிரி வட்டம் என கூறுகிறோம்.

இதன் வெளிப்பகுதி இளம் பழுப்பு நிறமாகவும், உட்பகுதி சிவப்பு நிறத்துடன் பிற வண்ணங்கள் கலந்து காணப்படும். இதை “சோலார் ஹாலோ; சன் ஹாலோ” என்று அழைக்கிறோம். இந்த வளிமண்டல ஒளி நிகழ்வுகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக மழைக்காலங்களில்தான் இப்படிப்பட்ட வானவில், ஒளிவட்டம் போன்றவை தெரியும். ஆனால் பகல் நேரத்தில் சூரியனைச் சுற்றி தென்பட்ட ஒளிவட்டம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டத்தில் இது போன்ற காட்சி தென்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று காலை முதலே வானம் படு மந்தமாக காணப்படுகிறது. மேக மூட்டமாகவும் காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த வண்ண வட்டத்தைப் பார்க்க முடியவில்லை. சூரியனையும் பார்க்க முடியவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply