சிவப்பு அரிசி புட்டிங்

Loading...

சிவப்பு அரிசி புட்டிங்

தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி (பொடி அரிசி) 2 கப்

கருப்பட்டி 4 டேபிள்ஸ்பூன்

மில்க்மெய்ட் 1/4 கப் அல்லது தேவையான இனிப்புக்கு

பால் 2 கப்

பிஸ்தா, பாதாம், முந்திரி வறுத்தது ஒரு கைப்பிடி

ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் தலா ஒரு சிட்டிகை.செய்முறை :

சிவப்பு அரிசியை ரவையாக உடைத்து ஊற வைக்கவும். 1 மணி நேரத்திற்கு பின் சிவப்பு அரிசி ரவையை குழைய வேக விடவும்.

குக்கரில் கருப்பட்டியை கரைத்து வைக்கவும். பருப்புகளை உடைத்துக் கொள்ளவும்.

இப்போது வெந்த ரவையுடன் மில்க்மெய்ட், பால் கலந்து சிறிது கெட்டியாகும் வரை கிளறவும்.

வடித்த கருப்பட்டியை கெட்டியாக காய்ச்சி சேர்க்கவும்.

ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து கலந்து இறக்கி, வறுத்து உடைத்த பருப்புகள் பாதியை சேர்த்து கலக்கவும்.

மீதி பாதியை அலங்கரிக்க வைத்துக் கொள்ளவும்.

இப்போது இந்த புட்டிங் கலவை இட்லி மா பதமாக இருக்கும்.

இதனை சிறு கப்களில் ஊற்றி அலங்கரித்து குளிர வைத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply