சிறு பருப்பு முறுக்கு

Loading...

சிறு பருப்பு முறுக்கு
தேவையான பொருட்கள் :

பச்சரிசி மா – 4 கப்

வேக வைத்த சிறு பருப்பு – 1 கப்

ஓமம் – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

எள்ளு – 2 டீஸ்பூன்

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

மஞ்சள் – ஒரு சிட்டிகை


செய்முறை :

சிறு பருப்பை ஒன்றரை கப் தண்ணீரில் போட்டு வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.

இத்துடன் மஞ்சள், பெருங்காயம், பச்சை மிளகாய் விழுது, தேவையான உப்பு, அரிசி மா, எள்ளு, ஓமம் இத்துடன் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காய வைத்து சேர்த்து தேவையான தண்ணீருடன் கலந்து முறுக்கு மா பதமாக பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு மிதமான காய்ந்த எண்ணெயில் முறுக்காக பிழிந்து எடுக்கவும்.

சிறிது ஆறிய பின் டப்பாவில் போட்டு வைக்கவும். மிகவும் கரகரப்பாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply