சிக்கன் பால் பிரியாணி

Loading...

சிக்கன் பால் பிரியாணி
தேவை­யான பொருட்கள் :

சிக்கன் – 1/2 கிலோ
பாசுமதி அரிசி – 1 1/2 கப்
பசும்பால் – 1 1/2 கப்
பிரியாணி இலை, க.பட்டை, லவங்கம், ஏலக்காய் – சிறி­த­ள­வு தாளிக்க
தயிர் – 2 டீஸ்பூன்
உப்பு – சிறி­த­ள­வு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கொத்­தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி, புதினா – சிறி­த­ள­வு
இஞ்சி, வெ.பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
அரிசியை பொருத்து தண்ணீர் – 1 1/4 கப் (அ) 1 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் மற்றும் நெய் – 1 குழிக்கரண்டி
வெங்காயம் – 1
தக்காளி – 1


செய்­­முறை :

அரிசியை நன்கு கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் சிக்கனை சுத்தம் செய்யவும்.

தயிர், இஞ்சி, வெ.பூண்டு விழுது சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் கீறி வைத்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், மசாலா தூள் சேர்த்து பிரட்டவும். பின்னர் இஞ்சி விழுது மற்றும் சிக்கனை சேர்த்து மூடி வேக விடவும்.

கோழி வெந்ததும் பால், தண்ணீர், உப்பு, அரிசி சேர்த்து வேக விடவும்.

முக்கால்வாசி வெந்ததும் 20 நிமிடங்கள் குறைந்த நெருப்­பில் வைத்து­விட்டு இறக்­கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply