சாம்சங் நிறுவனத்தின் புதிய ஆம்னியா எம் ஸ்மார்ட்போன்

Loading...

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஆம்னியா எம் ஸ்மார்ட்போன்அதிகமாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வரும் சமயத்தில் ஆம்னியா எம் என்ற விண்டோஸ் ஸ்மார்ட்போனை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய தகவலே இது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் என்பது தான். ஆம்னியா எம் ஸ்மார்ட்போன் விண்டோஸ் 7.5 மேங்கோ இயங்குதளம் கொண்டு இயங்கும்.

இந்த ஆம்னியா எம் ஸ்மார்ட்போனின் விலை விவரமும் வெளியாகி உள்ளது. இந்த ஆம்னியா எம் ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் சூப்பர் அமோலெட் திரை தொழில் நுட்பத்தினை பெறலாம். இதன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர், இந்த ஸ்மார்ட்போனின் இயங்குதளம் சிறப்பாக செயல்பட உதவும்.

5 மெகா பிக்ஸல் கேமராவும், 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 3ஜி நெட்வொர்க் வசதியையும் இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக பயன்படுத்தலாம். 4 ஜிபி இன்டர்னல் மெமரியும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம்.

இத்தனை தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்த இதில் 1,500 எம்ஏஎச் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி நீடித்து உழைக்கும் தன்மையினை கொண்டதாக இருக்கும். இந்த ஆம்னியா எம் ஸ்மார்ட்போன் ரூ. 18,650 விலை கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் இ-ஸ்டோரில் ரூ. 16,400 விலையில் பெறலாம்.

சாம்சங் இ-ஸ்டோரில் வேர் டு பை என்ற பட்டனை க்ளிக் செய்தால் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,400 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply