சாம்சங் அறிமுகத்தில் விரைவில் கேலக்ஸி ஸ்மார்ட்போன்…

Loading...

சாம்சங் அறிமுகத்தில் விரைவில் கேலக்ஸி ஸ்மார்ட்போன்…கேலக்ஸி ஒய் டியோஸ் லைட் எஸ்-5302 என்ற ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் நமது நாட்டில் அறிமுகம் செய்கிறது சாம்சங் நிறுவனம்.

சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பாக காலூன்றி வருகிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் கேலக்ஸி ஒய் டியோஸ் லைட் எஸ்-5302 என்று புதிய ஸ்மார்ட்போனை நமது நாட்டில் அறிமுகம் செய்கிறது சாம்சங்.

டியூவல் சிம் வசதியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன், கேலக்ஸி பாக்கெட் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் என்று கூறலாம். ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், கியூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினை சிறப்பாக கொடுக்கும்.

இந்த திரை தொழில் நுட்பத்தின் மூலம் சிறப்பான தெளிவான தகவல்களை வழங்குவதுடன், இதில் 2.8 இஞ்ச் திரையினையும் பெறலாம். 2 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 832 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

எப்எம் ரேடியோ, வைபை போன்ற வசதிகளை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில், சூப்பராக வைபை பயன்பாட்டினையும் பெறலாம். 2ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன், 1,200 எம்ஏஎச் பேட்டரியையும் கொண்டதாக இருக்கும்.

இந்த பேட்டரி நீடித்து உழைக்க சிறப்பாக சப்போர்ட் செய்யும் என்று கூறலாம். இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரவில் அறிமுகமாகலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply