சாம்சங்கின் புதிய மஞ்சள் நிற லேப்டாப்

Loading...

சாம்சங்’கின் புதிய மஞ்சள் நிற லேப்டாப்..கணினிச் சந்தையை அதிரடியாகக் கலக்கிக் கொண்டிருக்கும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் சமீபத்தில் உயர்தரம் கொண்ட ஒரு புதிய லேப்டாப்பைக் களம் இறக்கி இருக்கிறது. இந்த லேப்டாப்புக்கு சாம்சங் சிரீஸ் 7 கேமர் எல்லோ 3டி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த புதிய லேப்டாப்பின் பெயரிலேயே எல்லோ என்று இருப்பதால் இந்த லேப்டாப் மஞ்சள் நிறத்தில் மட்டுமே வரும். மஞ்சள் நிறம் மக்களின் மனங்களை மயக்கிவிடும் என்ற நம்பிக்கையில் இந்த லேப்டாப்பை மஞ்சள் நிறத்தில் களமிறக்குகிறது சாம்சங்.

அட்டகாசமன ஸ்டைலில் வரும் இந்த புதிய லேப்டாப் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் களமிறங்குகிறது. குறிப்பாக இந்த லேப்டாப் மிகவும் சக்தி வாய்ந்த எஎம்டி ரேடியோன் எச்டி 7870எம் மொபைல் ஜிபியுவைத் தாங்கி வருகிறது. இதனால் இந்த லேப்டாப் க்ராபிக்ஸில் பட்டையைக் கிளப்பும் என்று நம்பலாம்.

அதோடு இந்த லேப்டாப் 1டிபி எச்டிடி மற்றும் அதிரடி வேகம் கொண்ட 128ஜிபி எஸ்எஸ்டியுடன் வருகிறது. அதனால் இது தாறுமாறான வேக‌த்துடன் இயங்கும். இதன் 14.3 இன்ச் 3டி திரையில் வீடியோ கேம் விளையாடுவது ஒரு புதுமையான அனுபவத்தைத் தரும்.

இன்டல் கோர் ஐ7-3610 க்யுஎம் ப்ராசஸருடன் இந்த லேப்டாப் வருவதால் இது மிகவும் உறுதியாக இருக்கும். அதோடு இன்டலின் ஐவி பிரிட்ஜ் சிபியுவை இந்த லேப்டாப் கொண்டிருப்பதால் இதன் இயங்கு திறனும் அமர்க்களமாக இருக்கும்.

குறைந்த எடையில் மிகவும் அடக்கமாக இருக்கும் இந்த மஞ்சள் லேப்டாப் 2,643 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply