சாக்லெட் பொரி உருண்டை

Loading...

சாக்லெட் பொரி உருண்டை

தேவையான பொருட்கள்
கொழுப்பு குறைந்த பால் ‍- 1 கப்.
பால் பவுடர் ‍- 1/4 கப்.
கோகோ பவுடர் ‍- 1/4 கப்.
ஸ்வீட்னர் ‍- 3/4 கப்.
வறுத்த கோதுமை தவிடு -‍ 1/2 கப்.
அரிசி பொரி ‍- 1/4 கப்.
வெனிலா எசன்ஸ் ‍- 4 அல்லது 5 துளிகள்.
வெண்ணெய் ‍- 2 டேபிள் ஸ்பூன்.


தயாரிக்கும் முறை

பால் பவுடரையும் கோகோ பவுடரையும் நன்றாகக் கலந்து, அரை கப் பாலில் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் வெண்ணெயைப் போட்டு, அதில் ஸ்வீட்னரைச் சேர்த்து, கரையும் வரை கொதிக்க விடவும். மீதி பாலையும் அதோடு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கோகோ பவுடர் பேஸ்ட்டை இதில் கொட்டியபடியே இடைவிடாது கிளறவும். பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாதவாறு வரும்போது கெட்டியாக மிருதுவாக ஆகிவிடும். அப்போது எசன்ஸ் விடவும். அரிசிப் பொரியை சேர்க்கவும். பாதியளவு கோதுமை தவிடை சேர்க்கவும். அடுப்பை அணைத்து நன்றாக ஆறவிடவும். கை பொறுக்கும் சூட்டில் இந்தக் கலவை இருக்கும்போது, சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டி, மீதியுள்ள கோதுமை தவிட்டின் மேல் புரட்டி எடுக்கவும். பட்டர் பேப்பரில் வைத்தால் நன்றாக செட் ஆகிவிடும். ஆறியவுடன் பறிமாரவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..
விருப்பமுள்ளவர்கள் கோதுமைத் தவிட்டிற்கு பதில் ஓட்ஸ் சேர்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply