சரும பிரச்சினைகளை தீர்க்கும் வெந்தயம் பேஸ் பேக்

Loading...

சரும பிரச்சினைகளை தீர்க்கும் வெந்தயம் பேஸ் பேக்வெந்தயத்தைக் கொண்டு தலை­முடியின் ஆரோக்கியத்தை மட்டு­மின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்­சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.

* வெந்தயம் சிறந்த க்ௌன்சராகவும் செயற்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும்.

இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்­பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி, சருமம் சுத்தமாக இருக்கும்.

அத்துடன் வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ்பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.
இதனை தினமும் செய்து வரலாம்.

* வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சினைகள் இருப்ப­­வர்கள், இதனை வாரம் 1–-2 முறை போடுவது நல்லது.

* வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் வருவது தடுக்­கப்­படும்.

* வெயிலில் நீங்கள் அதிகம் சுற்றி, அதனால் உங்கள் சருமத்தின் நிறம் பழுப்பு நிறத்தில் மாற்ற­மடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம்.

அதற்கு 1/2 கப் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம், கை, கால்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

இதனை வெயில் காலத்தில் தினமும் செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

*வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனோடு 4 கப் நீர் ஊற்றி அடுப்பிலிட்டு 15 நிமிடங்கள் காய்ச்சி எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தினம் 2 முறை முகத்தைக் கழுவுவதற்கு இந்த நீரை உபயோகித்தால் முகத்துக்கு நல்ல வனப்பையும், சுருக்கங்களை நீக்கி நல்ல மென்மையும் பொன் வண்ணத்தையும் பெறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply