சரும பளபளப்பிற்கு அரியகுறிப்புகள்

Loading...

சரும பளபளப்பிற்கு அரியகுறிப்புகள்தண்ணீர் என்பது மனித உடலுக்கு அடிப்படையான ஒன்று மட்டுமல்லாமல், நல்ல ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய ஒன்று. தண்ணீரை சரியான அளவில் குடித்தால், பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம். ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை.


எலுமிச்சை உடம்புக்கு நல்லது

எலுமிச்சை உடம்புக்கு நல்லது குளிப்பதற்கு முன் ஒரு தண்ணீரிரில், ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின் கடைசியாக ஒரு “லெமன் பாத்’ எடுங்கள். இதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் தரும்.


மெருகுக்கு பப்பாளி

நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்சியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம். இதனால் தோல் சுருக்கம் நீங்கி, சருமம் பளபளப்பாக இருக்கும்.

Loading...
Rates : 0
VTST BN