கோவைக்காய் ரைஸ்

Loading...

கோவைக்காய் ரைஸ்
தேவையானவை:
கோவைக்காய் – 100 கிராம், வடித்த சாதம் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு, மிளகாய்த்தூள் – தேவையான அளவு.

செய்முறை:
கோவைக்காயை ஆவியில் வேகவிடவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு… கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். ஆவியில் வேக வைத்த கோவைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, வெங்காய கலவையுடன் சேர்த்துக் கிளறி, நன்கு வதக்கி, இறக்கும் முன் எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கி இறக்கவும். இதனுடன் வடித்த சாதம் சேர்த்துக் கலந்து சாப்பிடவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply