கோலிப்ளவர் பொரியல்

Loading...

கோலிப்ளவர் பொரியல்

தேவையான பொருட்கள்:

கோலிப்ளவர் – 1

உப்பு- தேவையான அளவு

மஞ்சள் தூள்- சிறிது

சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்

தாளிக்க :

நல்லெண்ணெய்- 1 டீஸ்பூன்

கடுகு- 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்

சீரகம்- 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 1

கறிவேப்பிலை – சிறிது.



செய்முறை:

கோலிப்ளவரை பத்து நிமிடங்கள் சுடு நீரில் ஊற வைக்கவும். இப்படிச் செய்வதால் அப்பூவில் இருக்கும் சிறு பூச்சி, புழுக்கள் அழிந்துவிடும்.

கோலிப்ளவரை சிறிதாக நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டுத் தாளித்துக் கொள்ளவும்.

அதில் நறுக்கிய கோலிப்ளவர், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டுச் சிறிது தண்ணீர் தெளித்து மூடிவிட்டு வேக விடவும்.

காய் வெந்ததும் சாம்பார் தூளைச் சேர்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெயிட்டுக் கிளறி இறக்கிப் பரிமாறவும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply