கோர்ன் சீஸ் டோஸ்ட்

Loading...

கோர்ன் சீஸ் டோஸ்ட்
தேவை­யான பொருட்கள்:

பிரட் – – 6 துண்­டுகள்
வெங்­காயம் – – – ¼கப்(பொ. ந)
குடை­மி­ளகாய் – –- ¼ கப் (பொ.ந)
வேக வைத்த ஸ்வீட் கோர்ன் – – ½ கப்
துரு­விய சீஸ் –- ½ கப்
காய்ச்­சிய பால் – ¾ கப்
மிளகுத் தூள் – – ½ தே.க
வெண்ணெய் – – 1 மே.க
மா- – 1 தே.க
சில்லி ப்ளேக்ஸ் -– 1 தே.க
உப்பு – – தே.அ.


செய்­முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 தே.க எண்ணெய் ஊற்றி காய்ந்­ததும், வெங்­கா­யத்தை சேர்த்து பொன்­னி­ற­மாக வதக்கி, பின் குடை­மி­ளகாய் சேர்த்து சில நிமி­டங்கள் வதக்­கவும். பின்னர் அதில் வேகவைத்த ஸ்வீட் கோர்ன் சேர்த்து நன்கு கிளறி இறக்கிக்கொள்ள வேண்டும்.

பின்பு மற்­றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உரு­கி­யதும், மா சேர்த்து சில நொடிகள் கிளறி, பின் பால் ஊற்றி நன்கு ேசாஸ் போன்று ஓர­ளவு கெட்­டி­யான பதத்தில் வரும் வரை கிளறி, பின் அதில் காய்­க­றி­களை சேர்க்க வேண்டும்

. பிறகு அதனை நன்கு கிளறி, சீஸ் சேர்த்து உருக வைக்­கவும். சீஸ் உரு­கி­யதும், அடுப்பை அணைத்து விட வேண்டும். அடுத்து பிரட் துண்­டு­களை நெய் தடவி தோசைக்­கல்லில் டோஸ்ட் செய்து கொள்­ளவும்.

இறு­தியில் ஒவ்­வொரு பிரட் துண்­டு­களின் ஒரு பக்கத்திலும், கோர்ன் கலவையைப் பரப்பி பரிமாறினால், கோர்ன் சீஸ் டோஸ்ட் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply