கோதுமை புட்டு

Loading...

கோதுமை புட்டு

தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், எலுமிச்சம் பழம் – ஒன்று, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 4, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
கோதுமை மாவை வெறும் கடாயில் வறுக்கவும். ஆறிய பின் உப்பு சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து பிசிறி, ஆவியில் வேகவிடவும். வெந்த பின் புட்டு போல உதிர்ந்துவிடும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய் தாளித்து… ஆவியில் வெந்த கோதுமை புட்டு சேர்த்துக் கிளறி இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.


குறிப்பு:
விருப்பப்பட்டால், தாளிக்கும்போது சிறிது நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply