கோடை காலத்தில் உதடுகளை சுற்றி வெடிப்பு ஏற்பட்டால்

Loading...

கோடை காலத்தில் உதடுகளை சுற்றி வெடிப்பு ஏற்பட்டால்பெண்களின் மிக முக்கிய பிரச்சனை உதடுகள் வெளிறி, எரிச்சல், வெடிப்பு ஏற்பட்டு, வறண்டு விடுவது. அதுவும் கோடை காலத்தில் உதடு வறண்டு விடும்.

இதற்கு காரணம் உடலில் நீர் சத்து குறைந்து விடுவதே ஆகும். எனவே கோடை காலத்தில் கிடைக்கும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் அதிகளவில்சேர்த்து கொள்ள வேண்டும்.

முகத்திலேயே மிகவும் மென்மையான தோல், உதடுகளில் தான் உள்ளது.

அதனால், எளிதில் வெடிப்பு, ரத்தம் வடிதல், சிவப்பு நிறமாதல் ஏற்படும்.

உதடுகளில் நாம் பயன்படுத்தும், ‘லிப் – பாம், மாய்ஸ்சரைசர்’ போன்றவை, எண்ணெயை அடிப்படையாகக் கொண்டு அமைவது நல்லது.

சரும வறட்சியால் தான், உதடுகள் வெடிக்கும். நிறைய நீர் அருந்துவது நல்லது.

உதடுகளை சுற்றி வெடிப்பு ஏற்பட்டால், ‘வைட்டமின் – பி2′ குறைவு என, அர்த்தம். ‘பி2′ சத்துள்ள காய்கறிகள், உணவுகளை, போதுமான அளவு சாப்பிட வேண்டும்.

பயன்படுத்தும், ‘லிப் – பாம்’களில், வெண்ணெய், ‘வைட்டமின் – இ’ அதிகம் இருக்கும் படி பார்த்துக் கொள்வது நல்லது.

சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிப்பதில், தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்காக, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதிகளவில் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொண்டால், நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணீரை, அது வழங்கி விடும்.

உப்பு சேர்க்காத வெண்ணெய், தேங்காய் எண்ணெய் உதட்டில் தடவலாம்.

சுத்தமான பன்னீரை பஞ்சில் நனைத்து, உதட்டின் மீது அரை மணி நேரம் வைக்கவும்.

தொடர்ச்சியாக செய்யும் போது, வெடிப்புகள் குணமாகும். கருப்பு நிறம் மறைந்து, இயற்கையான நிறம் மீட்கப்படும்.

‘லிப்ஸ்டிக்’ போடுவதை குறைத்துக் கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply