கோடையில் குளிர்ச்சி தரும் குளியல்கள்

Loading...

கோடையில் குளிர்ச்சி தரும் குளியல்கள்கோடைகால தட்பவெப்ப நிலைக்கு தகுந்தவாறு உடலை பலப்படுத்தி உடலின் நச்சுத் தன்மை நீங்க புத்துணர்ச்சி தர குளியல் முறைகள் மிக அவசியம்.

வேப்பிலை குளியல்:
வேப்பிலை இயற்கையிலேயே நல்ல கிருமி நாசினி. இக்குளியல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன் உடலில் உள்ள அனைத்து நச்சுக் கிருமிகளை அழிக்கவும் பயன்படுகிறது. உடல் துர்நாற்றத்தை போக்கவும், தோல் வியாதிகளை குணப்படுத்தவும் நல்ல மருந்தாகும். வேப்பிலையை முன்தினம் இரவே தண்ணீரில் போட்டு வைத்து மறுநாள் அந்த நீரில் குளித்து வந்தால் கோடை வெயிலுக்கு சருமம் பாதுகாக்கப்படும்.

சூரிய குளியல்:
இந்த குளியல் காலை 6 மணி முதல் 8 மணி வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே உடலுக்கு நன்மை பயக்கும்.

மண் குளியல் :
உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, மன அழுத்தம், தூக்கமின்மை முதலிய வற்றை குறைப்பதுடன் உடல் நிறத்தை பொலி வாக்குகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply