கொழுப்பு அதிகமாக உள்ளதா இந்த உணவை சாப்பிடாதீர்கள்

Loading...

கொழுப்பு அதிகமாக உள்ளதா இந்த உணவை சாப்பிடாதீர்கள்தற்போது அதிகமாகி வரும் நோய் தாக்குதலுக்கு உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டதே காரணம் ஆகும்.

பாஸ்ட் புட் உணவால் பல்வேறு நோயை நாமே விலை கொடுத்து வாங்குகிறோம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பாரம்பரிய உணவு வகையில் உள்ளதை போன்று ஆயிரக்கணக்கான மடங்கு கலோரி, துரித உணவு வகைகளில் உள்ளது.

இந்த உணவில் கலக்கப்படும் சைனீஸ் சால்ட், வினிகர் உட்பட அனைத்தும் ரசாயனங்கள் ஆகும்.

இதனால் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். இதை தொடர்ந்து சாப்பிடும் போது மாரடைப்பு, ரத்த அழுத்தம், அல்சர், வயிற்றுப்போக்கு, சிறுவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் ஆண்மைக் குறைபாடு, நீரிழிவு நோய் ஏற்படும்.

நூடுல்ஸில் வழுவழுப்பு தன்மைக்காக சேர்க்கப்படும் மெழுகு போன்ற பொருள் எளிதில் ஜீரணமாகாது.

இதனால் குடல், இரைப்பை, உணவுக்குழாய் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இந்த வகை உணவை சாப்பிட்டால் பெண்களுக்கு மலட்டுத் தன்மை, குழந்தை பேறு பிரச்னை, கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும்.

எனவே, இந்த உணவை அறவே தவிர்க்க வேண்டும்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் கண்டிப்பாக இதுபோன்ற துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply